தமிழ்நாடு வருகிறார் ராகுல்காந்தி..! சிறப்பான வரவேற்புக்கு தயாராகும் காங்கிரஸ்..!
மே 21ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வர இருப்பதை அடுத்து அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க தமிழக காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
மே 21ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினத்தை அடுத்து ஸ்ரீபெரும்புதூருக்கு முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வருகை தர உள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்த இருப்பதாகவும் அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு வருகை தரவுள்ள ராகுல் காந்தியை சிறப்பாக வரவேற்க தமிழக காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்ற பிறகு ராகுல் காந்தி தமிழக வர இருப்பதை அடுத்து அவருக்கு சிறப்பாக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran