1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 17 மே 2023 (07:44 IST)

பிரதமர் மோடிக்கு முன்பே அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி.. என்ன காரணம்?

பிரதமர் மோடி அமெரிக்க செல்ல இருப்பதாகவும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் ஜூன் 22ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க பயணம் செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முன்பே அதாவது ஜூன் நான்காம் தேதி அமெரிக்காவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அவரும் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நியூயார்க் நகரில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க் மட்டும் இன்றி வாஷிங்டன் கலிபோர்னியா ஆகிய நகரங்களிலும் ராகுல் காந்திக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது
 
எனவே ராகுல் காந்தி அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அப்போது அவர் அங்குள்ள அரசியல் தலைவர்கள் தொழிலதிபர்களை சந்திப்பார் என்றும் அதுமட்டுமின்றி ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் அவர் உரையாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது மூன்று புள்ளி
 
 
Edited by Siva