வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 17 மே 2023 (07:46 IST)

முதல்வர் பதவி லிங்காயத் சமூகத்திற்கே.. திடீரென போர்க்கொடியால் கர்நாடக காங்கிரஸ்-க்கு நெருக்கடி..!

கர்நாடக மாநில தேர்தல் முடிவு கடந்த பத்தாம் தேதி வெளியான நிலையில் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் ஆகியும் இன்னும் முதல்வர் பதவி யாருக்கு என்பதையே முடிவு செய்யவில்லை. ஏற்கனவே டி கே சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகிய இருவரும் முதல்வர் பதவி போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வேறு சிலரும் முதல்வர் பதவியை குறி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில் லிங்காயத் வகுப்பைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவருக்கு தான் முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு இந்திய வீர சைவ மகாசபை கடிதம் எழுதி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 
 
காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு லிங்காயத் வகுப்பினர்தான் அதிகம் உதவி செய்துள்ளனர் என்றும் லிங்காயத் பகுதியில் மற்றும் 34 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்றும் எனவே லிங்காயத் வகுப்பினருக்கும் முதலமைச்சர் பதவியும் 9 இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர்களில் 5 பேருக்கு அமைச்சரவை பதவியும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 
லிங்காயத் வகுப்பைச் சேர்ந்தவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Siva