1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (10:23 IST)

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிப். 28 ராகுல் காந்தி ஆலோசனை!

சென்னை வரும் ராகுல் காந்தி, நகர்ப்புற தேர்தலில் வென்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார். 

 
முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 28ல் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்காக தேசிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினி, கமல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில் இதற்காக சென்னை வரும் ராகுல் காந்தி, நகர்ப்புற தேர்தலில் வென்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார். சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் ஆலோசனையில் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள், மாவட்ட தலைவர்களும் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.