திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (18:05 IST)

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்த வெற்றி - ஸ்டாலின்!!

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உள்ளன என்று மு.க. ஸ்டாலின் பெருமிதம்.
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகளிலும் பேரூராட்சிகள், நகராட்சிகளிலும் மாநிலத்தில் ஆளும் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இறுதி முடிவுகளை மாநிலம் தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், இதுவரை வந்த முடிவுகளின்படி ஆளும் திமுக கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் திமுகவின் வெற்றி உறுதியாகியிருக்கிறது.
 
இந்த விலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், பெண்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த தேர்தலை திமுக எதிர்கொண்டது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுகவினர் எவ்வித புகாருக்கும் ஆளாகாமல் மக்கள் பணியாற்ர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
கடந்த ஒன்பது மாத கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம் இந்த வெற்றி . திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். எத்தனையோ நல்ல திட்டங்களை வரலாற்று சாதனையாக பதிவாக வகையில் ஆட்சி செய்கிறோம்.
 
100 விழுக்காடு மக்களுக்கான சேவையை அளிக்க வேண்டுமென்றால் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். அதை நம்பி மக்கள் எங்களுக்கு வெற்றியை தந்துள்ளனர். இந்த வெற்றியைக் கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. மேலும் பொறுப்பு அதிகரித்துள்ளது.
 
மக்களை சந்தித்துப் பேச நான் என்றுமே தயங்கியதில்லை. கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்துள்ளனர். அதை நிச்சயமாக காப்பாற்றுவோம் என்றார் மு.க. ஸ்டாலின்.