மக்கள் தீர்ப்புக்கு மரியாதை செய்வோம்- முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், ஆளுங்கட்சியாக திமுக பெரும்பானையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
கூட்டணிக்கட்சித் தலைவர்கள், உடன்பிறப்புகள், தோழமைக் கட்சியினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அனைத்து மக்களின் அரசாக திமுக ஆட்சி உள்ளாது. இது திராவிட மாடல்ஆட்சி. கழகத்தின் செல்வாக்கு 9 மாதக்காலத்தில் பெருகியுள்ளது. இதற்கு மக்கள் வழங்கிய மணிமகுடம்தான் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியாகும்.
அரசின் திட்டங்களை மக்களின் சேர்க்கும் கடமை உள்ளாட்சி பிரதி நிதிகளிடம் உள்ளது. உத்தரவு போடிவனாக மட்டுமல்ல, கண்காணித்து கவனிப்பவனாகவும் இருப்பேன். நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ் நாட்டை அமைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.