1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (19:36 IST)

வைகோ இல்லம் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

வைகோ இல்லம் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உடல் நலம் விசாரித்தார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலமின்றி இருந்ததை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இல்லம் சென்று அவரிடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நலம் விசாரித்தார் 
 
இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. இந்த சந்திப்பின்போது அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது