தமிழகத்தில் 3 வழித்தடங்களில் புதிய மித அதிவேக மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வருவதற்கான டெண்டர் அறிவிப்பை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்துள்ள நிலையில் மேலும் பல வழித்தடங்களில் இந்த சென்னையில் மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை - விழுப்புரம், சென்னை - வேலூர் மற்றும் கோவை - சேலம் ஆகிய 3 வழித்தடங்களில் மணிக்கு அதிகபட்சமாக 160 கி.மீ வேகத்தில் செல்லும் மித அதிவேக ரயில் சேவை (RRTS) உருவாக்கிட விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்வதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சாத்தியக்கூறு ஆய்வுக்கு பின், சாத்தியமான இடங்களில் RRTS பாதை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இதர பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K