திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2021 (11:18 IST)

ஜல்லிக்கட்டை பார்க்க வரும் ராகுல் காந்தி! – ஏற்பாடுகள் தீவிரம்!

பொங்கல் நாட்களில் பிரபலமாக தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை காண காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.

பொங்கல் திருநாளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த முறை கொரோனா பாதிப்புகள் இருப்பதால் பல கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில் மிகவும் பிரபலமான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் அன்று நடைபெற உள்ளது. வழக்கமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண வெளிநாடுகளிலிருந்து கூட பலர் வருகை புரிவார்கள். இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பியுமான ராகுல்காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அதேநாளில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.