தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் மீண்டும் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணி வழங்கப்படும்- எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
- ஹனும விஹாரி - அஷ்வின்: "கவலைப்படாம ஆடு மாமா" தமிழில் களமாடிய வீரர்கள்
- புகழ்பெற்ற பூலாம் வலசு சேவல் சண்டை போட்டிக்கு தயார்
- மத்திய அமைச்சர் விபத்தில் படுகாயம்..மனைவி உயிரிழப்பு
கூட்டணியின் முதல்வர் யார்? அதிமுகவே சொல்லும்! – பல்டி அடித்த பாஜக!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கும் நிலையில் கூட்டணி முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. ஆனால் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வது குறித்து பாஜக – அதிமுக இடையே தொடர்ந்து வாக்குவாதம் நீடித்து வந்தது. அதிமுக அறிவித்தபடி எடப்பாடி பழனிசாமியே கூட்டணிக்கும் முதல்வராக இருப்பார் என அதிமுக கூறி வந்ததை பாஜக மறுத்து வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேசியுள்ள தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி “தமிழகத்தில் பெரிய கட்சியான அதிமுகவே கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்யும்” என கூறியுள்ளார். இதனால் இரு கட்சிகளிடையேயான வாக்குவாதம் முடிந்துள்ளதால் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
