அடித்து வெளுக்கும் மழை..! –சதுரகிரி மலைக்கு செல்ல தடை!

sathuragiri
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:27 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை கோவிலுக்கு தை மாதத்தில் பக்தர்கள் புனித யாத்திரை செல்வது வழக்கம். வழக்கமாக தை மாதங்களில் பனிக்காலம் நிலவும் நிலையில் தற்போது மழை தொடர்ந்து வருகிறது. இதனால் காட்டுப்பகுதிகளில் வெள்ளம், ஓடைகளில் நீர்வரத்து ஆகியவை அதிகரித்துள்ளன.

இதனால் இந்த முறை சதுரகிரி யாத்திரை மேற்கொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :