திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 மார்ச் 2024 (07:37 IST)

வெள்ளியங்கிரி மலையேறிய 50 வயது நபர் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு! ஒரே மாதத்தில் 5 பேர் மரணம்..!

velliyangiri
கோவை வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் இன்னொரு புறம்  மலையேறும் நபர்களில் சிலர் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

கடந்த மாதம் முதல் இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறும் போது மூச்சு திணறல் உள்பட ஒரு சில காரணங்களால் உயிரிழந்தார்கள் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் என்ற 50 வயது நபர் திடீரென மூச்சு திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த ரகுராம் அவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்ததாகவும்  கூறப்படுகிறது.

கோவை வெள்ளியங்கிரி மலை ஏறுவது என்பது மிகவும் கடினமான விஷயம் என்பதால் உடல்நல குறைவு குறைவானவர்கள், முதியவர்கள் மலையேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டும் ஒரு சிலர் மலையேறி வருவதால் விபரீதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.

Edited by Siva