வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2024 (07:13 IST)

மிக எளிமையாக நடந்த விவேக் மூத்த மகள் தேஜஸ்வினியின் திருமணம்!

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு திடீரென இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில் அவரது இறப்புக்கு தடுப்பூசி காரணமா என்ற கேள்வி எழுந்தது.

விவேக்கின் மரணத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் அவரின் மகன் மறைந்திருந்தார். அந்த சோகமே விவேக்கை மனதளவில் பெரியளவில் பாதித்ததாக அவரோடு கூட இருந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்போது விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வினிக்கும் பரத் என்பவருக்கும் இடையே திருமணம் மிக எளிமையான முறையில் நடந்துள்ளது. இந்த திருமண நிகழ்வில் திரையுலக பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.