1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. AMMK members welcome Sasikala with ADMK flag

அதிமுக கொடியை கையில் ஏந்தி காத்திருக்கும் அமமுக தொண்டர்கள் !

அதிமுக
கிருஷ்ணகிரியில் அமமுக தொண்டர்கள் அனைவரும் சசிகலாவை வரவேற்பதற்காக அதிமுக கொடியை கையில் ஏந்தி காத்திருக்கின்றனர். 

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போது அதிமுக கொடி உள்ள காரில் வெளியே வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா, அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து தற்போது கிருஷ்ணகிரி உட்கோட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
இருப்பினும், கிருஷ்ணகிரியில் அமமுக தொண்டர்கள் அனைவரும் சசிகலாவை வரவேற்பதற்காக அதிமுக கொடியை கையில் ஏந்தி காத்திருக்கின்றனர். மேலும் அவர்கள் வரும் வாகனங்களிலும் அதிமுக கொடி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் போலீசார் அங்கு அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். 
அடுத்த கட்டுரையில்
குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுத்த பாதிரியார்… சில மணிநேரங்களில் நடந்த கொடூரம்!