1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 13 ஜூன் 2019 (16:49 IST)

திமுக-வில்தான் இரட்டை தலைமை: கொளுத்தி போட்ட ராதாரவி!

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், திமுகவில்தான் இரட்டை தலைமை உள்ளது என ராதாரவி பேசியுள்ளார். 
 
நடிகை நயன்தாராவை குறித்து இழிவாக பேசியதன் காரணமாக ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருமாறியதை அடுத்து திமுகவில் இருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ராதாரவி.  
 
இந்நிலையில் அவர் நேற்று அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் ஏன் இணைந்தீர்கள் என கேட்டபோது தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் கூட திமுக தலையிடுகிறது எனவே அதிமுகவில் இணைந்தேன் என கூறினார். 
அதோடு, உண்மையில் திமுகவில்தான் இரட்டை தலைமை உள்ளது. அந்த இன்னொரு தலைமை யார் என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் என பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 
 
ஏற்கனவே அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என கூறி அது பெரும் சர்ச்சையாகி அதிமுக தலைவர்கள் அதிமுக நிர்வாகிகளுக்கு சில கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதோடு ஊடங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இந்த சமயத்தில் திமுக குறித்து இப்படி பேசியிருப்பது சர்ச்சையான ஒன்றாக பார்க்கப்பட்டாலும் திமுகவை சேர்ந்த யாரும் இதனை பெரிதுபடுத்தவில்லை.