ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 ஜூன் 2019 (09:23 IST)

கொங்கு மண்டலம் இனி அதிமுக கோட்டையில்லை – ஸ்டாலின் பெருமிதம் !

பொள்ளாச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை மக்கள் உடைத்து உள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலானக் கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ஆளும் கட்சியான அதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிக் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திமுக சார்பாக தமிழ்நாடு முழுவதும் நன்றி தெரிவிக்கும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது ‘தேர்தலின் போது உங்களிடம் வாக்குக் கேட்டு ஓடோடி வந்தேன். இப்போது தேர்தலுக்குப் பிறகு நன்றி சொல்ல ஓடோடி வந்திருக்கிறேன். திமுக கூட்டணிக்கு வாக்களிக்காவதர்களுக்குக் கூட சேர்த்து செயல்பட்டு ஏன் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என அவர்களை எண்ண வைக்கும் படி திமுக எம்.பி.கள் செயல்படுவர். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்ற கூற்றைப் பொய்யாக்கியுள்ளனர் மக்கள். இங்கே ஆயிரங்களில் இல்லாமல் லட்சங்களில் ஓட்டுபோட்டு எங்களை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.