ஊடங்களுக்கு அதிரடி வார்னிங் கொடுத்த அதிமுக: எதற்கு தெரியுமா?

admk
Last Modified வியாழன், 13 ஜூன் 2019 (12:38 IST)
கட்சி தலைமை அங்கீகரிக்காதவர்களிடம் அதிமுகவின் கருத்தை கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
நேற்று காலை துவங்கிய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் வெறும் ஒன்றரை மணிநேரத்தில் முடிந்தது. அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற அதிமுகவுக்குள் எழுந்துள்ள சலசலப்புகளை தீர்க்க இந்த குழு கூட்டப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதை பற்றி பேசவே இல்லையாம். 
 
அதேபோல், அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களிடம் பேசினால் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் கட்சி தலைமை எச்சரித்தது. அதனை தொடர்ந்து இப்போது ஊடங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
அதாவது கட்சி தலைமை அங்கீகரிக்காதவர்களிடம் அதிமுகவின் கருத்தை கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க எங்களை ஆட்படுத்த வேண்டாம் எனவும் ஊடகங்களுக்கு அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
மேலும், அதிமுக பெயரில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் கொடுக்கும் பேட்டிகள், செய்திகளுக்கு எந்த வகையிலும் அதிமுக பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :