1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Radhakrishnan met jayalalitha in hospital

ஜெயலலிதாவை நேரில் சென்று நலம் விசாரித்த பொன்.ராதாகிருஷ்ணன்

ஜெயலலிதாவை நேரில் சென்று நலம் விசாரித்த பொன்.ராதாகிருஷ்ணன்

Radhakrishnan
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிரிஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 15ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருந்ததாகவும், அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவ நிர்வாகம் கூறியது. 
 
ஆனால் அவர் இன்னும் வீட்டிற்கு திரும்பாமல், மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. அவர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அதிமுக மற்றும் மருத்துவமனை தரப்பு அந்த செய்தியை மறுத்தது.  
 
ஜெயலலிதாவின் குணமடைந்து விட்டார். ஆனால், அவருக்கு ஓய்வு தேவை. எனவே மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தது. 
 
இந்நிலையில், இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
டாஸ்மாக் லாரியை கடத்த முயன்ற குடிமகன்கள்