தவெக மாநாட்டுக்கு வந்தவர்கள் எத்தனை பேர்? துல்லியமாக கணக்கிட சிறப்பு ஏற்பாடு..!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெற்று வரும் நிலையில், இந்த மாநாட்டிற்கு எத்தனை பேர் வந்துள்ளனர் என்பதை துல்லியமாக கணக்கிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக ஒரு அரசியல் கட்சி மாநாடு நடத்தினால், தோராயமாகவே ஒரு குறிப்பிட்ட லட்சக் கணக்கான தொண்டர்கள் வருகை தந்துள்ளனர் என்று கூறப்படுவதுண்டு. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு திடலில் பல்வேறு இடங்களில் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்யும் அமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், தொண்டர்கள் தங்களது வருகையை பதிவு செய்து சான்றிதழ் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்குள் தொண்டர்கள் வரும்போது தங்கள் மொபைல் மூலம் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், மாநாட்டிற்கு எத்தனை பேர் வந்துள்ளனர் என்பதை துல்லியமாக கணக்கிட முடியும் என கூறப்படுகிறது. மாநாட்டு திடலில் உள்ள பதாகைகளிலும் க்யூ ஆர் கோட் உள்ளதாகவும், அதைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் தொண்டர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva