தமிழ்நாடு, புதுவை, கேரளா.. 3 மாநிலங்களிலும் தவெக - காங்கிரஸ் கூட்டணி.. விஜய்யை சந்திக்கும் ராகுல் காந்தி?
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒரு பரபரப்பான அரசியல் தகவல் தீயாய் பரவி வருகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விரைவில் சந்திக்க உள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வரும் சூழலில், காங்கிரஸ் விஜய்யுடன் கைகோர்க்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள் ஏற்கனவே விஜய்யுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், கேரளா மற்றும் புதுச்சேரியிலும் விஜய்யின் செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், தவெக - காங்கிரஸ் இடையே 70 தொகுதிகள் வரை ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டாலும், டெல்லி பாஜக தரப்பில் இருந்து விஜய்க்குச் சில அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதால் அவர் தனித்துப் போட்டியிடும் முடிவில் இருப்பதாக ஒரு தரப்பு கூறுகிறது.
இருப்பினும், ராகுல் - விஜய் சந்திப்பு நிகழ்ந்தால் அது தென்னிந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Edited by Siva