ஞாயிறு, 15 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 9 பிப்ரவரி 2026 (08:15 IST)

முன்னாள் முதல்வர் வீட்டின் திருமண நிகழ்ச்சியில் விஜய் - உதயநிதி.. இருவரும் சந்தித்தார்களா?

முன்னாள் முதல்வர் வீட்டின் திருமண நிகழ்ச்சியில் விஜய் - உதயநிதி.. இருவரும் சந்தித்தார்களா?
சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யும், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் சந்தித்துக்கொண்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினரான சாஹில் மற்றும் வேதிகா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அரசியலுக்கு வந்த பிறகு கட்சி பணிகளில் தீவிரமாக இருக்கும் விஜய், இந்த விழாவில் ஜெகனை சந்தித்து நீண்ட நேரம் கைகுலுக்கி அன்பை பரிமாறிக்கொண்டார்.
 
இந்த சந்திப்பின் போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்களே தவிர, அரசியல் ரீதியான ஆலோசனைகள் எதுவும் நடைபெறவில்லை என தெரிகிறது. அதே விழாவில் நடிகர் சூர்யா, ஜெகனை ஆரத்தழுவி வரவேற்றார். மேலும் கமல்ஹாசன், கார்த்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்களும் இதில் பங்கேற்றனர். 
 
இரு மாநிலங்களின் செல்வாக்குமிக்க தலைவர்கள் ஒரே மேடையில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து 'மாஸ் லீடர்களின் சந்திப்பு' என உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
 
Edited by Siva