திங்கள், 16 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

உதயநிதி எந்த தொகுதியில் நின்றாலும் அந்த தொகுதியில் விஜய் நிற்பார்? அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

உதயநிதி எந்த தொகுதியில் நின்றாலும் அந்த தொகுதியில் விஜய் நிற்பார்? அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் ஒரு புதிய விவாதம் கிளம்பியுள்ளது. "துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ, அதே தொகுதியில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யும் களம் இறங்குவார்" என்ற கணிப்பை சில அரசியல் விமர்சகர்கள் முன்வைத்து வருகின்றனர். 
 
உதயநிதி ஸ்டாலின் தனது தற்போதைய தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில், அங்கு விஜய் போட்டியிட்டால் அது தமிழக தேர்தல் வரலாற்றிலேயே மிக முக்கியமான 'நேருக்கு நேர்' மோதலாக அமையும்.
 
விஜய்யின் தவெக தனித்து போட்டியிடும் முடிவில் உறுதியாக இருப்பதும், திமுகவை அவர் 'தீய சக்தி' என விமர்சித்ததும் இந்த மோதல் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. உதயநிதியை நேரடியாக தேர்தல் களத்தில் சந்திப்பதன் மூலம், தனது அரசியல் வருகையை ஒரு வலிமையான எதிர்க்க சக்தியாக நிலைநிறுத்த விஜய் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. 
 
ஒருவேளை இந்த இரு 'மாஸ்' தலைவர்களும் ஒரே தொகுதியில் மோதினால், அது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் தொகுதியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
 
Edited by Siva