திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 25 அக்டோபர் 2024 (18:19 IST)

இதுதான் உண்மையான மாநாடு: தவெக மாநாட்டில் வைக்கப்பட்ட 10 வரலாற்று வீரர்களின் படங்கள்..!

இதுவரை பல அரசியல் கட்சிகள் மாநாடுகளை நடத்திய நிலையில், அந்தந்த கட்சியின் தலைவர்களின் கட்டவுட்டுக்கள் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், முதல் முறையாக தமிழ் வரலாற்றுத் தலைவர்கள், சேர, சோழ, பாண்டியர், தமிழன்னை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் வைக்கப்பட்டுள்ளது தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் மட்டும்தான் என்று கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இது ஒரு வித்தியாசமான கட்சியாக உருவெடுத்து வருகிறது.
 
அக்டோபர் 24ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள தமிழக வெற்றி கழக மாநாட்டில் வீரன் அழகுமுத்துக்கோன், வேலுநாச்சியார், பெரும்பிடுகு முத்தரையர், சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜ ராஜ சோழன், தீரன் சின்னமலை, பூலித்தேவர், மருது சகோதரர்கள், மற்றும் ஒண்டிவீரன் ஆகிய 10 தமிழ் வரலாற்று வீரர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. 
 
ஏற்கனவே பெரியார், காமராஜர், அம்பேத்கர்,வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கட்-அவுட்டுக்கள் வைக்கப்பட்ட நிலையில் சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் தமிழ் அன்னைக்கும் கட்-அவுட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த கட்-அவுட்டுக்கள் மற்றும் புகைப்படங்களை பார்த்த பொதுமக்கள், "இதுதான் உண்மையான அரசியல் மாநாடு" என்று கூறி வருவது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   
 
 
Edited by Siva