1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. PVR theatre in Chennai airport

சென்னை ஏர்போர்ட்டில் 5 பிவிஆர் தியேட்டர்கள்..??

பிவிஆர்
பயணிகள் விமானத்திற்காக காத்திருக்கும் நேரத்தை செலவிடுவதற்காக சென்னை விமான நிலையத்தில் 5 திரைகள் கொண்ட திரையரங்கை அமைக்க பிவிஆர். திரையரங்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிவிஆர் திரையரங்கு நிறுவனம் இந்தியா முழுவதும் தனது அதிகளவு கிளைகளை பரப்பியுள்ள நிறுவனமாகும். இந்தியாவில் கிட்டத்தட்ட 584 பிவிஆர் திரையரங்குகள் உள்ளன. இந்நிலையில் பயணிகள் விமானத்திற்காக காத்திருக்கும் நேரத்தை செலவிடுவதற்காக சென்னை விமான நிலையத்திற்குள் ஆயிரம் இருக்கைகள் கொண்ட 5 திரைகள் உடைய திரையரங்கை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இத்திரையங்கம் 15 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது எனவும், அடுத்த ஆண்டு இத்திரையரங்கம் செயல்பாட்டிற்கு வரும் எனவும் பிவிஆர் அதிகாரி பிரமோத் அரோரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
நித்யானந்தாவை தேட ப்ளூ கார்னர் நோட்டீஸ்.. இண்டர்போல் அதிரடி