1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2019 (08:12 IST)

புழல் ஏரியும் வறண்டது: சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப்பஞ்சம்

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் செம்பரப்பாக்கம், புழல் மற்றும் சோழவரம் ஆகிய ஏரிகள் தான் பெரும்பங்கு வகித்தன. ஆனால் செம்பரப்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் ஏற்கனவே வறண்டுவிட்டதால் இதுநாள் வரை புழல் ஏரி மட்டுமே சென்னை மக்களுக்கு கைகொடுத்து வந்தது. ஆனால் தற்போது புழல் ஏரியும் வறண்டுவிட்டதால் அந்த ஏரியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டது. 
 
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 கன அடி ஆகும். இதில் இருந்து நேற்று வரை மோட்டார் மூலம் தினமும் 6 அடி கனநீர் மோட்டார் மூலம் எடுக்கப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது புழல் ஏரியில் வெறும் 2 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதனால் மோட்டார் மூலம் 6 கனஅடி நீர் அனுப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே சென்னைக்கு கைகொடுத்து வந்த ஒரே ஏரியும் கைவிட்டதால் சென்னையில் தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை ஏற்பட்டுள்ளது
 
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீரும் வற்றிப்போய்விட்டதால் மழை பெய்வது மட்டுமே ஒரே தீர்வாக காணப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில் சென்னையில் மழை பெய்யவில்லை என்றால் சென்னை மக்கள் தற்காலிகமாக சென்னையில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது