விஐபிகளின் தரிசன பகுதியில் நின்ற மூதாட்டியை வலுக்கட்டாயமாக அகற்ற உத்தரவிட்ட புளியங்குடி டிஎஸ்பி
திருவிழாவில் விஐபிகளின் சொகுசு தரிசன பகுதியில் நின்ற மூதாட்டியை வலுக்கட்டாயமாக அகற்ற உத்தரவிட்ட புளியங்குடி டிஎஸ்பி...காவல்துறையினரின் மனிதாபிமானமற்ற செயலை காட்டுவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரன் நாராயணர் கோமதி அம்மாள் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவதை தொடர்ந்து அப்பகுதியில் விஐபிகள் மற்றும் வீவீ ஐ பி களுக்கு பிரத்யேக இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் தரிசனம் செய்வதற்க்காக மூதாட்டி ஒருவர் அமர்ந்திருந்தார் அப்போது அங்கு வந்த புளியங்குடி காவல் துணை கண்கானிப்பாளார் அசோக் மூதாட்டியை வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்ற முயன்றார். மூதாட்டியால் தடுப்பு கட்டைகளுக்கு இடையே வர முடியாமல் அவதி அடைந்தார் அதனை மீறி வலுக்கட்டாயமாக புளியங்குடி டிஎஸ்பி உடன் சேர்ந்து சக காவலர்கள் இழுக்க முற்பட்டனர். இச்செயல் காவல்துறையின் மணிதாபிமனமற்ற செயல் என பக்தர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்...
மனிதாபிமான இல்லாமல் செயல்பட்ட புளியங்குடி டிஎஸ்பி அசோக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக...