செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (15:30 IST)

நடிகர் கார்த்தி மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம்

KARTHY
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கார்த்தி மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்தார்.

இயக்குனர் அமீர் இயக்கத்தில், கார்த்தி அறிமுகம் ஆன படம் பருத்தி வீரன். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, பையா, சிறுத்தை, உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகர் ஆனார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான். இப்படத்தின் வெற்றிக்குப் பின், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம்   விருமன். இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இப்படத்தை சூர்யா தயாரித்துள்ளார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது.  இந்த நிலையில், இன்று காலை ஆறு மணியளவில் மதுரை அருள் மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.