வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (10:09 IST)

ஆயிரம் காளியம்மன் கோயில் திருவிழா கோலகலமாக துவங்கியது!!

காரைக்கால் திருபட்டினம் ஆயிரம் காளியம்மன் கோயில் திருவிழா இன்று அதிகாலை கோலகலமாக துவங்கியது. 

 
ஆயிரம் காளியம்மன் கோயில் இந்தியாவின் புதுச்சேரி ஒன்றியத்தில் உள்ள காரைக்கால் அருகே திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஒரு பழங்கால இந்துக் கோயில். இந்த கோயிலின் மரத்தாலான காளியம்மன் சிலை பிரதான தெய்வத்திற்கு மிகவும் பிரபலமானது.
 
செவி வழி கதையின் படி செங்குந்தா முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பக்தர், கடலோரப் பகுதியில் காளியம்மன் தேவியின் சிலை வைத்து ஒரு பெட்டியை கண்டு எடுப்பதாதாக கனவு கண்டார். அடுத்த நாள் அவர் உண்மையிலேயே ஒரு ஓலைச்சுவடியையும், ஒரு சிலையுடன் இருந்த ஒரு வெள்ளிப் பெட்டியைக் கண்டார்.  
 
அந்த ஓலைச்சுவடி படி தினமும் 1000 சடங்கு பொருள்களுடன் பூஜை செய்வது சாத்தியமற்றது என்பதால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூஜை நடத்த சமூகம் முடிவு செய்து, ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் திருவிழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும், 1000 பொருட்களுடன் ஒரு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. 
 
இந்நிலையில், ஆயிரம்காளியம்மன் கோயில் திருவிழா இன்று அதிகாலை கோலகலமாக துவங்கியது. அனைத்து வகையான பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள், மஞ்சள் கயிறு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் எண்ணிக்கையில் பக்தர்கள் எடுத்து வந்தனர்.
 
இதையடுத்து இந்த வரிசை பொருட்கள் அனைத்தையும் ஆயிரங்காளியம்மன் முன்பு வைத்து படைக்கப்பட்டது. இந்த விழாவையொட்டி புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது.