வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 24 ஜூலை 2022 (14:37 IST)

பாதியில் வந்த ஈபிஎஸ்; கலாய்த்த புகழேந்தி!!!

புகழேந்தி கூறியுள்ளதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லியில் கதவுகள் முழுமையாக மூடப்பட்டுவிட்டன என தெரிவித்துள்ளார்.


அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்னை திரும்பி விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் நடைபெறும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் பிரிவு உபச்சார விழாவில் கலந்துகொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று இருந்தார்.

 இதனை அடுத்து அவர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட ஒருசில பிரபலங்களையும் சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் திடீரென பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்களை சந்திக்காமல் ஜனாதிபதியின் பிரிவு உபச்சார விழாவில் மட்டும் கலந்து கொண்டு விட்டு அவர் சென்னை திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத்தொடர்ந்து இது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லியில் கதவுகள் முழுமையாக மூடப்பட்டுவிட்டன என தெரிவித்துள்ளார்.