ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (12:29 IST)

அதிமுக அலுவலகத்தை திறந்த ஈபிஎஸ்க்கு அதிர்ச்சி! – வெள்ளி வேல் மாயம்??

ADMK
இன்று அதிமுக அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில் அலுவலகத்தில் இருந்த வெள்ளி வேல் முதற்கொண்டு பல பொருட்கள் திருட்டு போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் எழுந்தது. இந்நிலையில் கடந்த வாரம் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து உள்ளே புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் அலுவலகத்தை திறக்க அனுமதி கோரி ஈபிஎஸ் – ஓபிஎஸ் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்கள் சாவியை பெற்று அதிமுக தலைமை அலுவலகத்தை திறந்தனர். ஆனால் அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பரிசுப் பொருட்கள், வெள்ளி வேல் உள்ளிட்ட பல பொருட்கள் திருட்டு போயுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.