1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (18:29 IST)

ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை: ஈபிஎஸ் கடிதத்தை நிராகரிக்க கோரிக்கை!

ravindranath
அதிமுக எம்பி எம்பி ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் அவர் அதிமுக எம்பி அல்ல என்றும் எடப்பாடிபழனிசாமி சமீபத்தில் மக்களவை சபா நாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு கடிதம் எழுதினார் 
 
இந்த நிலையில் எடப்பாடிபழனிசாமி கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் நிராகரிக்க வேண்டும் என ரவீந்திரநாத் கடிதம் அனுப்பியுள்ளார் 
 
அந்த கடிதத்தில் எடப்பாடிபழனிசாமி தன்னை நீக்கியதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழுவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்