1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (15:40 IST)

புதுச்சேரியில் ஊரடங்கு; பயணத்தை தொடங்கிய வெளிமாநில தொழிலாளர்கள்!

புதுச்சேரியில் ஊரடங்கு; பயணத்தை தொடங்கிய வெளிமாநில தொழிலாளர்கள்!
புதுச்சேரியில் ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டனர்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பகுதி நேர முழு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் மே 3 வரை முழு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரியில் உள்ள வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் ஹவுரா எக்ஸ்பிரஸ் முழுவதும் பயணிகள் கூட்டமாக காணப்பட்டுள்ளது.