1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Puducherry Assembly 2020 budget

கிரண்பேடி எதிர்ப்பை மீறி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நாராயணசாமி!!

#PuducherryAssembly
புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி. 
 
புதுச்சேரியில் 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் உரையாற்றுவார் என கூறப்பட்டிருந்தது. 
 
ஆனால் 9.40 ஆகியும் கிரண்பேடி வரவில்லை. எனவே, கிரண்பேடி இல்லாமல் சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டமன்ற நிகழ்வுகளை துவங்கினார். இருப்பினும் பட்ஜெட் தாக்கல் நண்பகல் 12 மணிக்கு கிரண்பேடி வருகைக்காக ஒத்திவைக்கப்பட்டது. 
 
அப்போதும் அவர் வரவில்லை. எனவே, புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி. பட்ஜெட்டிற்கு கிரண்பேடி ஒப்புதல்வழங்காத நிலையில் அவரது எதிர்ப்பை மீறி புதுச்சேரி சட்டப்பேரவையில் 20-21-க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
அடுத்த கட்டுரையில்
கறுப்பர் கூட்டத்தை நிரந்தரமாக முடக்க நடவடிக்கை! – யூட்யூப் நிறுவனத்திற்கு பரிந்துரை கடிதம்!