வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 ஜூலை 2020 (11:12 IST)

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்! – தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்!

மாநில கூட்டுறவு வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் நடைமுறைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னர் அவசர சட்டம் நிறைவேற்றுவதற்கான ஒப்புதலை அளித்தது. இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவின் மீது இடைக்கால தடை விதிக்க கோரி கூட்டுறவு வங்கிகள் சங்கம் மனு அளித்தது. இதன் மீதான விசாரணையில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் மத்திய அரசின் முடிவுக்கு தடை விதிக்க மறுத்துள்ளது உயர்நீதிமன்றம்.

அதேசமயம் இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.