1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2020 (17:50 IST)

புதுவையில் 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் புதுவை உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வில்லை என்பது தெரிந்தது
 
கடந்த சில மாதங்களாக மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை படித்து வருகின்றனர் மேலும் ஒரு சில மாநிலங்களில் கடும் நிபந்தனைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தாலும் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது இப்போதைக்கு இல்லை என்ற முடிவையே தமிழக அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி புதுவையில் வரும் எட்டாம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. புதுவை மாநிலத்தின் பள்ளி கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதாகவும், சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும் உள்பட ஒரு சில நிபந்தனைகளுடன் வரும் எட்டாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இது குறித்த புதுவை அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது