திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2017 (06:40 IST)

புதுச்சேரியில் தொடங்கிய புரட்சித்தீ மெரினாவை தாக்குமா?

1176 மார்க் எடுத்தும் நீட் காரணமாக மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் போன அனிதா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் காரணமாக மாணவர் சமுதாயம் கொதித்தெழுந்துள்ளது.


 



 
 
அனிதாவின் தற்கொலை செய்தி வெளிவந்ததுமே ஆங்காங்கே போராட்டத்தில் குதித்த மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதிவேண்டும் என்று போராடி வருகின்றனர்
 
இந்நிலையில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத் தீயை மூட்டியிருக்கிறார்கள் புதுச்சேரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள். அந்த மாணவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'சகோதரி அனிதாவின் தற்கொலை அரசின் திட்டமிட்டப் படுகொலை. அவரின் மரணத்திற்கு இந்த அரசு என்ன பதிலை சொல்லப்போகிறது ? வாக்களித்து ஆட்சியில் அமர வைத்த குற்றத்திற்காக இவர்கள் செய்யும் அனைத்து விஷயத்திலும் நாம் அமைதியாக கடந்து சென்று விட வேண்டுமா? என்று கூறினர்.
 
மேலும் புதுவையில் தொடங்கிய இந்த புரட்சி தீ, மெரினாவிலும் விரைவில் தாக்கும் என்று மாணவர்கள் சமூக  வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதனால் மெரீனாவில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.