செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2017 (05:02 IST)

பிரேத பரிசோதனை முடிந்தது. அனிதாவின் உடல் தந்தையிடம் ஒப்படைப்பு

மத்திய அரசின் நீட் தேர்வு காரணமாக ஏராளமான கனவுகளுடன் படித்த அரியலூர் அனிதா நேற்று தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொண்ட துயர சம்பவத்தால் தமிழகமே கண்ணீரில் ஆழ்ந்துள்ளது. தங்கள் வீட்டு பெண் இறந்தது போல ஒவ்வொரு தமிழனும் தங்கள் கோபத்தை சமூக வலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் நேற்று அனிதாவின் உடல் அரியலூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அனிதாவின் உடல் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. இன்று அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது
 
இன்னும் ஆயிரம் ஆயிரம் அனிதாக்கள் நீட் காரணமாக மனம் நொந்துபோய் உள்ளனர். எனவே இன்னொரு உயிர் பலியாவதற்குள் மத்திய, மாநில அரசு உடனடியாக அடுத்த செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து மருத்துவ கனவுகளுடன் இருக்கும் மாணவர்களை காப்பாற்றுங்கள். இனியும் கையாலாகாமல் அரசு இருந்தால் மக்கள்புரட்சி வெடிப்பதை தவிர்க்க முடியாது.