செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2017 (06:06 IST)

என் தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி: சிவகார்த்திகேயன்

நீட் தேர்வு காரணமாக உயிரை மாய்த்து கொண்ட அனிதாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து இரங்கல் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கோலிவுட் திரையுலகினர்களும் தங்கள் வருத்தத்தை டுவிட்டர் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.



 
 
கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனிதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் என் தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி என்று கூறியுள்ளார்.
 
இந்த தேசம் தகுதியுள்ள ஒரு மருத்துவரை இழந்துவிட்டதாகவும், என் தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி’ என்று குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் ஏராளமான ரசிகர்களும் அனிதா மறைவிற்கு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.