1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pudhucherry flood, one missing

புதுவையில் கனமழை.. பைக்கில் சென்றவரை இழுத்து சென்ற வெள்ளம்.. தேடும் பணி தீவிரம்..

flood
புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கு ஏற்பட்டதாகவும் இந்த வெள்ளத்தில் பைக்கில் சென்ற ஒருவரை காணவில்லை என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் நேற்று இரவு 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது என்றும் சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ள நீரில் ஒரே பைக்கில் மூன்று பேர் சென்ற நிலையில் திடீரென பைக்கை வெள்ளம் இழுத்துச் சென்றதாகவும் அதில் இரண்டு பேரை அங்கிருந்த பொதுமக்கள் காப்பாற்றிய நிலையில் ஒருவரை வெள்ளம் இழுத்துச் சென்றதாகவும் அவரை தேடும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இரண்டு மணி நேரத்தில் 15 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்த நிலையில் புதுச்சேரி எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாறிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran
 
அடுத்த கட்டுரையில்
சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயன்ற போதை ஆசாமி கைது!