1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (11:00 IST)

இலவச மளிகை பொருட்கள் மகிழ்ச்சியில் மக்கள்!

சென்னை அயனாவரம், பெரம்பூர், கொளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு கெரோனா நிவாரணியாக 2000 ரூபாய் மற்றும் இலவச மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு அனைத்து நியாய விலை கடைகளிலும் இன்று தொடங்கப்பட்டது. 

 
தமிழக முதல்வர் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பொதுமக்கள் அனைவருக்கும் நான்காயிரம் ரூபாய் கெரானா நிவாரணமாக அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் தனது ஆட்சி அமைந்தவுடன் தமிழக முதல்வர் முதல் தவணையாக 2000 ரூபாய் கெரானா நிவாரண நிதியாக அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் நிகழ்வு மே மாதம் தொடங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டாம் தவணைக்கான  2000 ரூபாய் மற்றும் இலவச மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பையை பொதுமக்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி  முக கவசம் அணிந்து  நிவாரண நிதி 2000 ரூபாய் மற்றும் தொகுப்பு பையனை பெற்று வருகின்றனர். 
 
அவர்கள் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இதுபோன்ற நிவாரணங்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பையை பொதுமக்களுக்கு வழங்குவது  தங்கள் வாழ்வாதாரம் சீராக இருக்கும் என்றும் இதுபோன்ற நிகழ்வுகளை தற்போது வழங்கி வரும் தமிழக அரசுக்கும் தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என்றும் தெரிவித்தனர்.