சரக்கு வாங்க மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் மதுப்பிரியர்கள்
சேலம் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் அங்கிருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைக்கு குவிந்து வரும் மது பிரியர்கள்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டு இந்த நிலையில் நேற்று முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் நேற்று காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறந்தவுடன் மது பிரியர்கள் முண்டியடித்துக்கொண்டு மதுபாட்டில்களை வாங்கினர்.
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, சேலம் மாவட்டத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைக்கு குவிந்து வரும் மது பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.