1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (12:42 IST)

மதியம் 1 மணிக்கு 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை?

பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். 

 
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு உண்டு என பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்து இருந்த நிலையில் பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 
ஆம், 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை மதியம் 1 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்தேர்வுக்கான அட்டவணையை அமைச்சர் வெளியிட உள்ளார் என  அறிவிப்பு வெளியாகியுள்ளது.