12 நாளில் 100 மில்லியன் வியூஸ்… அரபிக் குத்து பாடலுக்கு குறையாத மவுசு!
பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான அரபிக்குத்து பாடல் இதுவரை 10 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் இணையத்தில் தெறி ஹிட் அடித்து வருகிறது. தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் ஏபரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாட்டு ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட் ஆகி உள்ளது.
இந்த பாடல் வெளியானது முதல் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள் முதல் திரை உலகினர் வரை இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 12 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது. இதைத் தங்களுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.