சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு !
சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
பிளஸ் டூ மாணவர்களுக்கு இதுவரை செய்முறை தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு உள்ள நிலையில் எழுத்து தேர்வு நடத்துவது குறித்து அமைச்சர் முதல்வருடன் ஆலோசனை செய்து வருகிறார்.
இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும். அதனைப்பொருத்து தமிழகத்தில் தேர்வு எப்போது என முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.