புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 1 ஜூன் 2021 (11:30 IST)

நாங்க ரொம்ப கறார் ... சென்னையை கட்டுக்குள் வைத்திருக்கும் போலீஸ்!

ஊரடங்கு நடைமுறைகளின்படி, சென்னையிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 
ஆம், தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு கடந்த 24 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் தளர்வில்லா முழு ஊரடங்கு 2 ஆம் கட்டமாக இன்று முதல் 7 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட உள்ளது. 
 
ஊரடங்கு நடைமுறைகளின்படி, சென்னையிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் என தனித்தனியே வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு, ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
 
அத்தியாவசிய தேவைகள் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் சாலைகள் மற்றும் வாகனங்களில் சுற்றுவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.