Daily Horoscope
✕

பொதுத்தேர்வு தேதி பாடவாரியாக வெளியீடு !!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 2 மார்ச் 2022 (14:20 IST)
10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் பாடவாரியாக அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.  

 
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
 
அதன்படி, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 6ல் தொடங்கி மே 30-ல் முடிவடையும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 5ல் தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெறும். 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 24ல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 9 தொடங்கி மே 31 வரை நடைபெறும். 
 
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிப்பட்டது. இதனைத்தொடர்ந்து 10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் பாடவாரியாக அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.  
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments