1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (18:49 IST)

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை நாளை வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை எப்போது வெளியாகும் என மாணவர்களும் பெற்றோர்களும் கேள்வி எழுப்பி  வந்த நிலையில், நாளை ( மார்ச் 1 ) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகிறது.