1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2022 (18:18 IST)

10,11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதி: அன்பில் மகேஷ் தகவல்!

10,11, மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பொதுத் தேர்வு-தேர்வு தேதி அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து நிலையில் தற்போது இது குறித்த தகவல் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
10,11,12 வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வெளியிடுவதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது
 
இதனை அடுத்து இந்த தேதியை எதிர்பார்த்து 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது என்பது தெரிந்ததே