செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 13 நவம்பர் 2020 (08:33 IST)

மின்சார ரயிலில் பொதுமக்கள் இதற்காக மட்டும் பயணிக்கலாம்: தெற்கு ரயில்வே புது அறிவிப்பு!

பொது மக்கள் மின்சார ரயில்களில் பயணம் மேற்கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 
 
கொரொனா பாதிப்பு துவங்கியது முதல் பொது போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக் இதில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் ரயில்வேத்துறை முழுமையாக செயல்படாமல் இருந்து வருகிறது. குறிப்பாக மின்சார ரயில்கள் பொதுமக்களுக்காக இன்னும் இயக்கப்படாமலே உள்ளது. 
 
ஆனால், சிறப்பு மின்சார ரயில்களில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பயணம் செய்யலாம். இந்நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மற்றும் விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள் மின்சார ரயில்களில் பயணம் மேற்கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
 
எனவே பயணிகள் வசதிக்காக இதுவரை நாள் ஒன்றுக்கு 150 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக 204 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.