வீக் எண்ட் வருதுல... குஷியான போக்குவரத்து கழகம்!!

Sugapriya Prakash| Last Updated: வியாழன், 10 செப்டம்பர் 2020 (15:10 IST)
வார இறுதி என்பதால் ஊடுதல் பேருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து கடந்த 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 7 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே தொடங்கியது.
 
கொரோனா பாதிப்பின் காரணமாக பேருந்தில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. ஆனால், நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாள் என்பதால் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :